கிழக்கில் சட்டவிரோத இயங்கும் தனியார் பேருந்துகள் - கையூட்டலே காரணம்!
கிழக்கு மாகாணத்தில் 50 முதல் 60 க்கும் இடைப்பட்ட தனியார் பேருந்துகள், சட்டவிரோத போக்குவரத்து சேவையில் ஈடுபடுவதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
கிழக்கு மாகாணத்தில் 50 முதல் 60 க்கும் இடைப்பட்ட தனியார் பேருந்துகள், சட்டவிரோத போக்குவரத்து சேவையில் ஈடுபடுவதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
இது தொடர்பான முறைப்பாடு அடங்கிய தகவல்கள் தமக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
கையூட்டல் வழங்கி, போலியான வழி அனுமதிப்பத்திரங்களை பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
குறித்த போலி வழித்தட அனுமதிப்பத்திரங்களை விநியோகிக்கும், அதிகாரிகள் மற்றும் ஏனைய முறைக்கேடுகள் தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்லவுள்ளதாக, அவர் தெரிவித்தார்.
இது தொடர்பில் கிழக்கு மாகாண பிரதிநிதிகள், பொலிஸார், முன்னாள் ஆளுநர்கள், கையூட்டலுக்கு எதிரான ஆணைக்குழு ஆகியோருக்கு பல தடவைகள் தமது சங்கத்தினர் அறியப்படுத்தி உள்ளதாகவும் கெமுனு விஜேரட்ன குறிப்பிட்டார்.