வாக்குரிமைக்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து வருவதாக கூறும் ரஞ்சன் ராமநாயக்க!
ஜனாதிபதியின் மன்னிப்பின் கீழ், தனது வாக்குரிமைக்கான சாத்தியக்கூறுகளை தற்போது ஆராய்ந்து வருவதாக நடிகரும், அரசியல்வாதியுமான ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், ஜனாதிபதியின் மன்னிப்பு தொடர்பான தேவையான ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு, தேர்தல்கள் ஆணைக்குழு தமக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக கூறியுள்ளார்.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, ஜனாதிபதி அலுவலகத்தில் இருந்து சேகரித்த தேவையான ஆவணங்களை, தமக்கு கிடைக்கச் செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
வெளிநாட்டு சுற்றுப்பயணங்கள், சுகாதாரக் காப்புறுதி போன்ற பல நடவடிக்கைகளுக்கு இடையூறாக இருப்பதால், ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் வழங்கப்பட்டுள்ள சிவில் உரிமைகளை ஆராய்ந்து வருவதாக ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.
முன்னதாக, 2021 ஜனவரியில், நீதிமன்றத்தை அவமதித்ததற்காக ரஞ்சன் ராமநாயக்கவுக்கு இலங்கை உயர்நீதிமன்றத்தால் நான்கு ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
எனினும், ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட பின்னர், ரஞ்சனுக்கு அரசியல் நிபந்தனைகளின் அடிப்படைகளில் மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.