இறப்பர் செய்கைக்காக பயன்படுத்தப்படும் உர மூட்டையின் விலை குறைப்பு!

இறப்பர் செய்கைக்காக பயன்படுத்தப்படும் உர மூட்டையின் விலை குறைப்பு!

இறப்பர் பயிர்ச்செய்கைக்காக பயன்படுத்தப்படும் 50 கிலோகிராம் உர மூட்டையின் விலையை 9,500 ரூபாயிலிருந்து 5,500 ரூபாவாக குறைக்க நடவடிக்கை எடுக்குமாறு விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர, அரச உர நிறுவனத்தின் தலைவர் கலாநிதி ஜகத் பெரேராவுக்கு ஆலோசனை வழங்கினார்.

இறப்பர் செய்கையின் விளைச்சலை அதிகரிப்பதற்காகவே இந்த உர மானியத்தை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

இலங்கையில் பல வருடங்களாக இறப்பர் செய்கைக்கு உரம் இடப்படவில்லை என இலங்கை இறப்பர் ஆராய்ச்சி நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதன்படி, வருடாந்த மரப்பலகை விளைச்சல் 100,000 மெட்ரிக் தொன்னிலிருந்து 65,000 மெட்ரிக் தொன்னாகக் குறைந்துள்ளது.

அதன்படி, இறப்பர் பயிர்ச்செய்கைக்கான உர மானியத்தை இந்த வாரத்தில் இருந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.