பிரித்தானியாவில் இருந்து வந்த முக்கிய ஆலோசனை - திடீரென முடிவை மாற்றிய ரணில்!

பிரித்தானியாவில் இருந்து வந்த முக்கிய ஆலோசனை - திடீரென முடிவை மாற்றிய ரணில்!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்கு பிரித்தானிய நிபுணர் ஒருவருடன் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நிபுணர் ஆலோசனைக்கு அமைய ரணில் விக்ரமசிங்கவின் வாக்குச் சின்னமாக எரிவாயு சிலிண்டர் தெரிவு செய்யப்பட்டதாக குறிப்பிடப்படுகிறது.

இதயம் சின்னத்தை கேட்ட ரணில் இறுதியில் சிலிண்டர் சின்னத்தை எவ்வாறு பெற்றார் என்பது தொடர்பில் பல தரப்பினராலும் பேசப்பட்ட ஒரு விடயமாக மாறியிருந்தது.

இந்த நிலையில் எரிவாயு சிலிண்டரை பெறுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு பிரித்தானியாவில் இருந்தே ஆலோசனை கிடைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

பிரித்தானிய நிபுணர் டேவிட், ஜனாதிபதி தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்கு நேரயாக தொடர்புபட்டுள்ளதாகவும் அவரே ஜனாதிபதிக்கு ஆலோசனைகளை வழங்கி வருவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

இலங்கையில் ஏற்பட்ட எரிவாயு வரிசை மற்றும் பொருளாதார நெருக்கடிகளில் இருந்து மீண்டதை நினைவுப்படுத்தும் வகையிலேயே இந்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.