யாழ். பல்கலை மாணவன் போதைப்பொருளுடன் கைது!
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் தென்னிலங்கை மாணவன் ஒருவர் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோப்பாய் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், மாணவனை கைது செய்து சோதனையிட்ட போது, போதை பொருட்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.
அதனை அடுத்து மாணவனை கைது செய்து பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.