2024 ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் போட்டியிட கொலராடோ உச்சநீதிமன்றம் தடை!

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அடுத்த ஆண்டு இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் தமது மாநிலத்தில் போட்டியிடுவதற்கு முடியாது என கொலராடோ உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

2024 ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் போட்டியிட கொலராடோ உச்சநீதிமன்றம் தடை!

சுமார் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்க தலைநகரில் இடம்பெற்ற வன்முறை தொடர்பாக கிளர்ச்சியை தூண்டியமைக்காக, அரசியலமைப்பின் பிரகாரம் டொனால்ட் டிரம்ப் தகுதியான வேட்பாளர் அல்லவென நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அதன்படி, கொலராடோ மாநிலத்தின், ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குச்சீட்டிலிருந்து டொனால்ட் டிரம்பின் பெயர் நீக்கப்பட வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

எவ்வாறாயினும், டொனால்ட் டிரம்ப் தரப்பினர் இந்த முடிவை ஜனநாயகத்துக்கு எதிரானது என குறிப்பிட்டுள்ளதுடன், அதற்கு எதிராக மேன்முறையீடு செய்யவுள்ளதாகவும் அறிவித்துள்ளது. 

ஜனாதிபதி வேட்பாளரை தகுதி நீக்கம் செய்வதற்கு அமெரிக்க அரசியலமைப்பின் 14 ஆவது திருத்தத்தின் 3 ஆவது பிரிவை பயன்படுத்துவது இதுவே முதல் தடவையென குறிப்பிடப்படுகிறது. 

 எவ்வாறாயினும், கொலராடோவைத் தவிர மற்ற மாநிலங்களுக்கு இந்த தடை பொருந்தாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.