தேயிலை பயிர்ச்செய்கைக்கு மானிய விலையில் உரம் - உடன்படிக்கை கைச்சாத்து?

தேயிலை பயிர்ச்செய்கைக்கு மானிய விலையில் உரம் - உடன்படிக்கை கைச்சாத்து?

தேயிலை பயிர்ச்செய்கையின் விளைச்சலை அதிகரிக்கும் குறிக்கோளுடன் மானிய விலையில் உரத்தை வழங்குவதற்கான உடன்படிக்கை ஒன்று நாளை (29) கைச்சாத்திடப்படவுள்ளது.

அரசாங்கத்தின் இரண்டு உர நிறுவனங்கள், தேயிலை சபை, சிறு தேயிலைத் தோட்ட அபிவிருத்தி அதிகார சபையுடன் இதற்கான உடன்படிக்கையை விவசாய மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சில் கைச்சாத்திடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேயிலை பயிர்ச்செய்கைக்காக பயன்படுத்தப்படும் அனைத்து T-750, T-709 மற்றும் T-200 உரங்களின் விலையை 2,000 ரூபாயினால் குறைப்பதற்கு விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர அண்மையில் பணிப்புரை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.