க.பொ.த.சாதாரண தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் இன்று ஆரம்பம்!
2023ம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் இன்று ஆரம்பமாகியுள்ளது.
விடைத்தாள்களை மதிப்பீடு பணி நேற்று ஆரம்பமாகவிருந்த போதிலும், நாட்டில் நிலவும் மோசமான வானிலை காரணமாக பிற்போடப்பட்டதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர குறிப்பிட்டார்.