தமிழ் மக்களின் சமூக பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதி வழங்கியுள்ள உறுதி!

தமிழ் மக்களின் சமூக பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதி வழங்கியுள்ள உறுதி!

அரசாங்கத்தினால் ஸ்தாபிக்கப்படவுள்ள சமூக நீதி ஆணைக்குழுவில் தமிழ் மக்களின் சமூக பிரச்சினைகளை விரிவாக ஆராய சந்தர்ப்பம் ஏற்படுத்தி கொடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதி தெரிவித்துள்ளார்.

நுவரெலியா மாவட்ட வர்த்தகர்களுடனான சந்திப்பின் போது ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவா் மேலும் தொிவிக்கையில், ”இலங்கை வரலாற்றில் முதன்முறையாக லயன் அறைகளில் வாழும் மக்களுக்கு கிராமமொன்றில் வாழ்வதற்கான உரிமை வழங்கப்படும்.

அதுமாத்திரமல்ல மக்களுக்கு காணி உரிமை வழங்கப்படும். வீடுகளை நிர்மாணிப்பதற்கு அரசாங்கம் உதவியளிக்கும்.

அதற்காக தோட்டக் கம்பனிகளுக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ள லயன் அறைகள் இருக்கும் காணிகளின் குத்தகை ஒப்பந்தங்கள் இரத்துச் செய்யப்பட்டு அந்த காணிகளை அரசாங்கம் மீள சுவீகரிக்கும்.

மலையகத் தமிழ் மக்களுக்கு சமூக நீதியை நிலைநாட்டுவதற்காக அடுத்த வருடம் ஜனவரி அல்லது பெப்ரவரி மாதத்தில் மாநாடொன்று கூட்டப்படும்.” என ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.