பொருளாதாரப் பயங்கரவாதத்திலிருந்து நாட்டைக் காப்பாற்ற  இணையுங்கள்!

 பொருளாதாரப் பயங்கரவாதத்திலிருந்து நாட்டைக் காப்பாற்ற  இணையுங்கள்!

நாட்டின் பெரும் பணக்கார கோடீஸ்வரர்கள் 1212 கோடிக்கும் அதிகமான வரி செலுத்தாதுள்ளனர்.

ஆனால், VAT அதிகரிப்பால் சாதாரண மக்கள் மாதந்தோறும் 30,000 கோடிக்கு மேல் வரி செலுத்துகின்றனர்.

மக்கள் வங்கியிலும், இலங்கை வங்கியிலும் பிணையின்றி கடன்பெற்ற பெரும் செல்வந்த நிறுவனங்கள், கடனை செலுத்தாமல் நாட்டிற்கு பாரிய நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளன.

நட்பு வட்டார அரசியல்வாதிகள் மூலம் தமக்கு நன்மை பயக்கும் உடன்படிக்கைகளை செய்து தமது கடனை செலுத்த தவறி வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

 ஐக்கிய மக்கள் சக்தியின் இன்றைய கேகாலை மாவட்ட போர் வீரர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

பரேட் சட்டத்தை அமுல்படுத்தி நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில் முனைவோரின் தனிப்பட்ட சொத்துக்களை ஏலம் விட்டு வருகின்றனர்.

இந்த நிலை நிறுத்தப்பட வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிகழ்வில், ஓய்வு பெற்ற வட மாகாண கட்டளைத் தளபதி அட்மிரல் டி.எம்.எஸ்.திஸாநாயக்க, ஓய்வு பெற்ற மேல் மாகாண கட்டளைத் தளபதி அட்மிரல் என்.கே.டி.நாணயக்கார, ஓய்வு பெற்ற பனிப்பாளர் நாயகம் (வைத்தியர்) அட்மிரல் ஜி.எஸ்.ஆர்.ஜயவர்த்தன, ஓய்வு பெற்ற தென் மாகாண கட்டளைத் தளபதி அட்மிரல் ஹரேந்திர ஏக்கநாயக்க, ஓய்வு பெற்ற வடமேல் மாகாண கட்டளைத் தளபதி அட்மிரல் டி.என்.எம்.எல்.ஏ.திசாநாயக்க,ஓய்வு பெற்ற கிழக்கு மாகாண கட்டளைத் தளபதி மஹிந்த மஹவத்த உள்ளிட்ட இராணுவ உயர் அதிகாரிகள் பலரும் மாநாட்டில் கலந்து கொண்டனர்.