10 அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு - மரக்கறிகளின் விலைகளும் குறைந்தன!

லங்கா சதொச நிறுவனம் இன்று முதல் 10 அத்தியாவசிய பொருட்களின் விலைகளை, குறைக்க தீர்மானித்துள்ளது.

10 அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு - மரக்கறிகளின் விலைகளும் குறைந்தன!

லங்கா சதொச நிறுவனம் இன்று முதல் 10 அத்தியாவசிய பொருட்களின் விலைகளை, குறைக்க தீர்மானித்துள்ளது.

இதற்கமைய, ஒரு கிலோகிராம் பாசிப்பயறு, 325 ரூபாவினால் குறைக்கப்பட்டு, ஆயிரத்து 225 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

ஒரு கிலோ கிராம் செத்தல் மிளகாய், 60 ரூபாவினால் குறைக்கப்பட்டு 1,290 ரூபாவுக்கும்,

பருப்பு கிலோ ஒன்றின் விலை 15 ரூபாவினால் குறைக்கப்பட்டு, 299 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படவுள்ளது.

சிவப்பு நாட்டரிசி கிலோ ஒன்றின் விலை 200 ரூபாவாகவும், நெத்தலி கிலோ ஒன்றின் விலை 1,140 ரூபாவாகவும், ஒரு கிலோ கிராம் கோதுமை மாவின் விலை 200 ரூபாவாகவும் குறைக்கப்படவுள்ளன.

சோயா மீட் கிலோ ஒன்றின் விலை 650 ரூபாவாகவும், சிவப்பு அரிசி கிலோ ஒன்றின் விலை 139 ரூபாவாகவும், ஒரு கிலோ கிராம் கடலையின் விலை 540 ரூபாவாகவும் குறைக்கப்படவுள்ளது.

இதனிடையே, நாடு முழுவதும் சந்தைகளில் விநியோகிக்கப்படும் மரக்கறிகளின் விலை விபரங்கள் பின்வருமாறு -- 


கத்தரிக்காய்  =  120
உருளைக்கிழங்கு  =  170
பச்சை மிளகாய்  =  320
தக்காளி  =  300
மரவள்ளி  =  200
கோவா  =  380
கரட்=   400
பூசணி  =  80
வாழைக்காய்  =  120
சின்ன வெங்காயம்  =  350
பெரிய வெங்காயம்   =  110
பாகற்காய்  =  350
கருணைக்கிழங்கு  =  200
லீக்ஸ்  =  400
பீற்றூட்  =  450
கறிமிளகாய்  =   400
துபாய் பூசணி  =  160
தேசிக்காய்  =  600
தேங்காய்  =  100
முள்ளங்கி  =  150
இஞ்சி  =  3000
நீத்துபூசணி  =80
புடோல்    = 180
வெண்டிக்காய்  =150
பயிற்றங்காய்  =  400
போஞ்சி  =  450
பொன்னாங்காணி  =  80
வெங்காயப்பூ  =  450
வல்லாரை  = 200
கீரை  =  80
வெள்ளைப்பூண்டு =  500