அமெரிக்க வாழ் இந்தியர்களை சந்திக்கச் செல்லும் நரேந்திர மோடி!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் 21 ஆம் திகதி அமெரிக்காவுக்கான விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார்.

அமெரிக்க வாழ் இந்தியர்களை சந்திக்கச் செல்லும் நரேந்திர மோடி!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் 21 ஆம் திகதி அமெரிக்காவுக்கான விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் அழைப்பின் பேரில் அவர் அங்கு செல்லவுள்ளார்.

அமெரிக்க செல்லவுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, எதிர்வரும் 22 ஆம் திகதி அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுச் சந்திப்பில் பங்கேற்று உரை நிகழ்த்தவுள்ளார்.

அத்துடன் எதிர்வரும் 23 ஆம் திகதி, அமெரிக்க வாழ் இந்தியர்கள் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றவுள்ளார்.

இந்தியாவின் வளர்ச்சி பாதையில் வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களின் பங்கு குறித்து அவர் உரை நிகழ்த்தவுள்ளார்.