வெறுமனே விமர்சனங்களை முன்வைப்பதை விடுத்து செயலுக்கு வாருங்கள் - சஜித் பிரேமதாச!

சோசலிசத்தால் முன்னோக்கி செல்ல முடியாது என்பதை புரிந்து கொண்டுள்ளமையினாலும், சோசலிச கொள்கைகளால் ஏன் முன்னோக்கி பயணிக்க முடியாது என்பதனை தேடிப் பார்க்கவுமே இங்குள்ள சோசலிவாதிகள் இன்று உலகம் சுற்றி வருகின்றனர். 

தமது நடத்தை செயற்பாடுகள் குறித்தே விவாதம் நடக்க வேண்டும். அது குறித்த விவாதத்துக்கு அவர்கள் தயார் இல்லை. 

உழைக்கும் மக்களை வலுப்படுத்துவதை விடுத்து, பணக்கார வர்க்கத்தினரிடம் இருந்து தமது கட்சி நிதியத்தை நிரப்பிக்கொள்ளவே இங்குள்ள சோசலிவாதிகள் செயற்பட்டு வருகின்றனர் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

சோசலிசவாதத்தை கண்மூடித்தனமாக பின்பற்றி வரும் எமது நாட்டுத் தலைவர் ஒருவர் ஏழ்மையான மக்களை இலக்கு வைத்து ஆற்றி வரும் சமூக நலப் பணிகளை குறைமதிப்பிற்குட்படுத்தி வருகிறார். பிரபஞ்சம் திட்டத்தை விமர்சித்து வருகிறார். 

உலகத்தில் கூடிய அவதானத்துக்குரிய விவாதம் தான் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் விவாதங்களாகும். 

எதிர்த்தரப்புவாதிகள் தாம் இதுவரை மேற்கொண்ட தங்கள் பணிகளை முன்வைத்து விவாதங்களை நடத்துகின்றனர். 

ஆனால் இங்குள்ள சோசலிவாதிகள் செயற்பாட்டு ரீதியான பணிகள் குறித்த விவாதத்துக்கு தயார் இல்லை.

2016 இல் இந்நாட்டின் மொத்த வருமானத்தில் 52% இலாபத்தை இந்நாட்டுள்ள 20% செல்வந்த வர்க்கமே ஈட்டியுள்ளது. 

இந்நாட்டுள்ள மிகவும் ஏழ்மையானோர் 4.5%-5% இடைப்பட்ட இலாபத்தையே அடைந்துள்ளனர். 

இந்த சமூக ஏற்றத்தாழ்வை போக்க வேண்டும். உள்ளோர் இல்லாதோர் இடைவெளியை குறைக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் கீழ், 179 ஆவது கட்டமாக 10 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள் கம்பஹா, தொம்பே, கேரகல சங்கராஜ மகா

வித்தியாலத்திற்கு வழங்கி வைக்கும் நிகழ்வு மே 08 ஆம் திகதி இடம்பெற்றது.

இதன்போது, பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினரிடம் ஒரு இலட்சம் ரூபா பணத்தையும் வழங்கி வைத்தார்.