பயன்படுத்த முடியாமல் மோசமடைந்த உப்பு!
லங்கா உப்பு நிறுவனத்தின் பூந்தல மற்றும் பலடுபான உப்புச் சுரங்கங்களில் உற்பத்தி செய்யப்பட்ட 93,269,919 ரூபாய் பெறுமதியான சுமார் 2402 மெட்ரிக் தொன் உப்பு பல ஆண்டுகளாக மோசமடைந்து உருகி அழிக்கப்பட்டுள்ளதாக தேசிய தணிக்கை அலுவலகம் வெளிப்படுத்தியுள்ளது.
2023 ஆம் ஆண்டில் உற்பத்தி செய்யப்பட்டு, சரியான நேரத்தில் மூடப்படாத 65,425,279 ரூபாய் பெறுமதியான 1816.19 மெட்ரிக் தொன் உப்பு சேதமடைந்துள்ளதாக தணிக்கை சுட்டிக்காட்டுகிறது.
பலடுபான உப்பளத்தில் 520,640 ரூபாய் பெறுமதியான 16.27 மெட்ரிக் தொன் உப்பு மூன்று ஆண்டுகளாக சேமித்து வைக்கப்பட்டிருந்ததாகவும், இதனால் நிறம் மாறி உருகியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2023ஆம் ஆண்டிற்கான உப்பு நிறுவனம் குறித்த சமீபத்தில் வெளியிடப்பட்ட தணிக்கை அறிக்கையில், நிறுவனத்தின் செயல்பாட்டுத் திறமையின்மையின் கீழ் இந்தத் தணிக்கை குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறான பின்னணியிலேயே, நாடளாவிய ரீதியில் உப்பு தட்டுப்பாடு ஏற்பட்டு, உப்பு இறக்குமதிக்கு அரஙாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.