வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!
சிங்கராஜா வனத்தை பார்வையிட வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஆண்டு (2023) முதல் கலவன குடவ நுழைவாயிலிலிருந்து 27,427 உள்நாட்டு; மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாகவும், பயணச்சீட்டு வழங்கியதன் மூலம் கிட்டத்தட்ட இரண்டு கோடி வருமானம் கிடைத்துள்ளதாகவும் சிங்கராஜா வனக் கட்டுப்பாட்டு அலுவலகம் தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்றுக்குப் பின்னர் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து நல்ல மட்டத்தில் இருப்பதாக சிங்கராஜா வன அதிகாரி மங்கள குலரத்ன தெரிவித்தார்.
கடந்த ஆண்டு 13,182 உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளும், 4,128 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் வந்திருந்தனர். மேலும், இந்த ஆண்டு 1,816 உள்நாட்டு; சுற்றுலாப் பயணிகளும், 3,301 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் வந்துள்ளனர்.
இந்த ஆண்டு முதல் 27,427 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர். பயணச்சீட்டு விற்பனையிலிருந்து 1,65,34,963 வருவாய் கிடைத்தது.
இம்முறை பெய்த மழையினால் சிங்கராஜா வனப்பகுதி புத்துணர்ச்சியடைந்துள்ளதாகவும், வறண்ட காலங்களில் காண முடியாத நீர்வீழ்ச்சிகள் மற்றும் விலங்குகள் காணப்படுவதால் சிங்கராஜா வனப்பகுதிக்கு பாடசாலை மாணவர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளை வருகை தருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
சிங்கராஜாவின் வெத்தகல துடவ பிரதேசத்திலுள்ள தொடர்பாடல் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வழங்குவதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.