சீரற்ற காலநிலையால் சில பாடசாலைகளுக்கு விடுமுறை1

சீரற்ற காலநிலை காரணமாக மேல் மாகாணத்தில் உள்ள சில பாடசாலைகளுக்கு இன்று (14) விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கடும் மழை காரணமாக அனர்த்தத்தை எதிர்நோக்கியுள்ள பகுதிகளில் குறித்த பாடசாலைகளை மூடுவதற்கு மேல் மாகாண கல்விப் பணிப்பாளர் தீர்மானித்துள்ளார்.
இதன்படி, களனி மகா வித்தியாலயம், நீர்கொழும்பு றோமன் கத்தோலிக்க, பியக ஆரம்ப, யபரலுவ ஆனந்த வித்தியாலயம் உள்ளிட்ட பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.