மூடப்பட்டிருந்த பாடசாலைகள் தொடர்பில் அதிரடி அறிவிப்பு

மூடப்பட்டிருந்த  பாடசாலைகள் தொடர்பில் அதிரடி  அறிவிப்பு

ஸ்ரீ தலதா வழிபாட்டை முன்னிட்டு, ஏற்படக்கூடிய சன நெரிசலைத் தவிர்ப்பதற்குக் கண்டி நகரம் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் மூடப்பட்டிருந்த 24 பாடசாலைகளும் இன்று (28) திறக்கப்படவுள்ளன.

அத்துடன், பாதுகாப்பு பிரிவினரின் தங்குமிடமாகப் பயன்படுத்தப்பட்ட 37 பாடசாலைகள் நாளை (29) மீளத் திறக்கப்படவுள்ளதாக மத்திய மாகாண ஆளுநர் தெரிவித்தார்.

ஸ்ரீ தலதா வழிபாட்டை முன்னிட்டு கண்டி நகரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள 50க்கும் மேற்பட்ட பாடசாலைகள் ஏப்ரல் 21 முதல் மூடப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது