ட்ரம்பின் வெற்றி இலங்கை அரசின் வெற்றி!

ட்ரம்பின் வெற்றி இலங்கை அரசின் வெற்றி!

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) பெற்ற வெற்றியை தங்களுக்கு கிடைத்த ஒரு வெற்றியாகவே இலங்கை அரசு எண்ணுகின்றது. இதற்கு பல காரணங்கள் இருந்தாலும் கூட ஒரு காரணமாக அமெரிக்காவின் ட்ரம்ப் அரசு பதவியிலிருந்த போது 2018ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இருந்து வெளியேறியதைக் கூறலாம்.

மேலும் இதனால், ஐக்கிய நாடுகள் சபையின் நடவடிக்கைகளை அமெரிக்காவின் ஊடாக முறியடித்து விடலாம் என்ற தோற்றப்பாடு உள்ளதுடன் , அமெரிக்காவின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறுவனத்திற்கு தென்னிலங்கையை சேர்ந்த ஒருவரை நியமிக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைவாக , அமெரிக்காவின் புதிய அரசுடன் நல்லுறவை பேணுவதற்கு இலங்கை அரசு முயற்சிப்பதாக தெரியவருகின்றமை குறிப்பிடத்தக்கது