ராஜகுமாரி மரணம் தொடர்பில் பொலிஸ் அதிகாரிக்கு விளக்கமறியல்!
வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட போது உயிரிழந்த ராஜகுமாரி என்ற பெண்ணின் மரணம் தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்ட வெலிகடை பொலிஸ் நிலையத்தின் உப பொலிஸ் பரிசோதகரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த அதிகாரியை எதிர்வரும் 11ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபரான குறித்த உப பரிசோதகர் இன்றைய தினம் புதுக்கடை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
பதுளை நாவின்ன பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த பெண், தங்க ஆபரணத்தை திருடியதாக தெரிவித்து வெலிகடை பொலிஸாரால் கைது செய்யப்பட்டதுடன் கடந்த மே மாதம் 11ஆம் திகதி உயிரிழந்தார்.
கொழும்பு கொட்டா வீதியில் உள்ள வீடொன்றில் பணிபுரிந்துவந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டார்.
இந்தநிலையில் கூர்மையற்ற ஆயுதம் அல்லது அதுபோன்ற பலமான பொருளினால் தாக்கப்பட்டமையால் குறித்த பெண்னின் உடலில் ஏற்பட்ட இரத்தக்கசிவு மற்றும் அதிர்ச்சி காரணமாக அவரது மரணம் ஏற்பட்டுள்ளமை பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளதாக நீதவான் அறிவித்தார்.
இதன்படி, குறித்த பெண்ணின் மரணத்துடன் தொடர்புடைய சகல சந்தேகநபர்களையும் கைது செய்து உடனடியாக நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு உத்தரவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.