வெசாக்கை முன்னிட்டு இன்றும் சிறைக் கைதிகளை  பார்வையிட விசேட அனுமதி!

வெசாக்கை முன்னிட்டு இன்றும் சிறைக் கைதிகளை  பார்வையிட விசேட அனுமதி!

வெசாக் தினத்தை முன்னிட்டு இன்றும்  சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் கைதிகளுக்கு வெளியாட்களை பார்வையிடுவதற்காக விசேட அனுமதி சிறைச்சாலைகள் திணைக்களத்தினால் வழங்கப்பட்டுள்ளது.

அதன் பிரகாரம் இன்றும்   சிறைக்கைதிகளின் உறவினர்களால் கொண்டுவரப்படும் உணவு, இனிப்பு பண்டங்கள் மற்றும் சுகாதார பாதுகாப்பு பொருட்கள் மாத்திரம் கைதி ஒருவருக்கு பொதுமான அளவு பெற்றுக்கொடுப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருக்கிறது.

அனைத்து சுகாதார வழிகாட்டல்களுக்கு உட்பட்டதாக குறித்த வெளியாட்களை பார்வையிடும் நடவடிக்கை நாட்டில் அனைத்து சிறைச்சாலைகளிலும் மேற்கொள்ளப்படும் என சிறைச்சாலைகள் ஆணையாளர் காமினி பி. திஸாநாயக்க விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.