புத்தளம் - கற்பிட்டி பிரதான வீதியில் விபத்து - ஒருவர் உயிரிழப்பு!

புத்தளம் -  கற்பிட்டி பிரதான வீதியில் விபத்து - ஒருவர் உயிரிழப்பு!

புத்தளம் கற்பிட்டி பிரதான வீதியின் குறிஞ்சிப்பிட்டிப் பகுதியில் நேற்று (04) இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

கற்பிட்டியிலிருந்து பாலாவி நோக்கிச் பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று மற்றுமொரு முச்சக்கரவண்டியுடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த விபத்தின் போது இரண்டு முச்சக்கர வண்டிகளிலும் சாரதிகள் உட்பட 8 பேர் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், காயமடைந்தவர்கள் கற்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக புத்தளம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

சம்பவத்தில் கற்பிட்டி பகுதியைச் 65 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.