இலங்கையில் உருவாகும் தமிழ் திரைப்படம் #நீறுபூத்தநெருப்பு!

இலங்கையில் உருவாகும் தமிழ் திரைப்படம் #நீறுபூத்தநெருப்பு!

சர்வதேச விருது பெற்ற இலங்கை இயக்குனர் தேவிந்த கோங்காகேவின் இயக்கத்தில் புதிய தமிழ் திரைப்படம் #நீறுபூத்தநெருப்பு என்ற பெயரில் தயாராகி வருகிறது.

ஜேர்மனிக்கான இலங்கை தூதுவர், முன்னாள் நீதியரசர் சரத்கோங்காகேவின் புதல்வரான தேவிந்த இலங்கையின் இளையதலைமுறை இயக்குனர்களில் குறிப்பிடத்தக்க ஒருவர்.

இலங்கையில் அதிக பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இலங்கையின் கடைசி மன்னன் (கன்னுசாமி) சிரிவிக்கிரம ராஜசிங்கனின் வரலாற்றைக்கூறும் கிரிவசிபுர மற்றும் பவதாரண, நாட்டாமி ஆமி போன்ற திரைப்படங்களை இவர் ஏலவே இயக்கியுள்ளார்.

*இலங்கையின் திரைப்பட வரலாற்றில் சிங்கள சினிமாவில் முதல் தமிழ் பாடலை பாடலாசிரியர் பொத்துவில் அஸ்மின் எழுதியிருந்தார்.

அப்பாடல் இடம்பெற்ற திரைப்படம் இயக்குனர் தேவிந்த அவர்களின் #கிரிவசிபுர.

இந்தியாவில் இசை கற்று சிங்கள சினிமாவுக்கு இசையமைத்து வரும் பிபிலதெனிய மஹாநாமதேரோ கிரிவசிபுர படத்துக்கு இசையமைத்திருந்தார்.

மீண்டும் இயக்குனர் தேவிந்த கோங்காகே இயக்கத்தில் இசையமைப்பாளர் பிபிலதெனிய மஹாநாமதேரோ இசையில் பாடலாசிரியர் பொத்துவில் அஸ்மின் பாடல் எழுதி வருகின்றார்.