கிளிநொச்சியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளினால் போராட்டம்

கிளிநொச்சியில் பல்வேறு அழுத்தங்களுக்கும் அச்சுறுத்தல்களுக்கும் மத்தியில் இலங்கையின் 75 ஆவது தேசிய சுதந்திர தினத்தினவிழா கரிநாளாக பிரகடனப்படுத்தி வடகிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளினால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தினர் நேற்று இந்த போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

இதன்போது இலங்கையின் சுதந்திர தினம் "எங்களுக்கு கரிநாள்", "நீங்கள் சுதந்திரம் அனுபவிக்கும்போது நாங்கள் ஒடுக்கப்படுவதா?", "உங்களுக்கு சுதந்திரநாள் எங்களுக்கு கரி நாள்", "காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் எங்கே?",என்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இப்போராட்டத்தில் அரசியல் பிரமுகர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர் கள்,பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.