மைத்திரிபால சிறிசேன யாழ் மாவட்டத்தில் பல சந்திப்புகளில் ஈடுபடவுள்ளார்!

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன யாழ் மாவட்டத்தில் பல்வேறு சந்திப்புக்களில் ஈடுபடவுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் அழைப்பின் பெயரில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள மைத்திரிபால சிறிசேன, நாளை (29) முதல் மூன்று நாட்கள் யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து பல்வேறு பொது நிகழ்வுகளிலும், சந்திப்புக்களிலும் ஈடுபடவுள்ளார்.

யாழ்ப்பாண மறை மாவட்ட ஆயருடனான சந்திப்பு, ஆரியகுளம் ஸ்ரீநாக விகாரை வழிபாடு, நல்லூர் கந்தசுவாமி ஆலய வழிபாடு, யாழ்ப்பாணம் ஜும்மா
பள்ளிவாசல் வழிபாடு, இந்து மத தலைவர்களுடனான சந்திப்பையும் மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அத்துடன் கோண்டாவில் ஆடை உற்பத்தி நிலைய திறப்பு விழா, உடுப்பிட்டி மகளீர் கல்லூரிக்கு விஜயம், விடுவிக்கப்பட வேண்டிய காணிகளின் உரிமையாளர்களுடனான சந்திப்பு, 2015- 2019 ஆட்சிக்காலப்
பகுதியில் விடுவிக்கப்பட்ட காணிகளை பார்வையிடல், பலாலி விண்மீன் விளையாட்டு கழக மைதான திறப்பு விழா உள்ளிட்ட பல்வேறுபட்ட நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளதுடன் துறைசார்ந்த தரப்புகளுடன் சந்திப்புக்களும் இடம்பெறவுள்ளன.