ஸ்வீடன் பாலியலை ஒரு விளையாட்டாக அறிவிக்கவில்லை - தவறாக வழிநடத்தும் செய்தி!

ஸ்வீடன் பாலியலை ஒரு விளையாட்டாக' அறிவிக்கவில்லை என்றும், இது தவறாக வழிநடத்தும் செய்தி என்றும் சரிபார்ப்பு இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது.

உலகின் சில பகுதிகளில், குறிப்பாக சில ஆசிய நாடுகளில் பாலியல் இன்னும் தடைசெய்யப்பட்டுள்ளது. 

இத்தகைய சூழ்நிலையில், ஸ்வீடன் உத்தியோகபூர்வமாக பாலியலை விளையாட்டாக அங்கீகரித்துள்ளதாகவும், இந்தநிலையில் ஸ்வீடன் முதல் ஐரோப்பிய செக்ஸ் செம்பியன்ஷிப்பை ஜூன் 8ம் திகதியன்று நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், இலங்கை மற்றும் இந்தியாவின் சில முன்னணி ஊடகங்கள் தெரிவித்திருந்தன.

ஸ்வீடிஷ் செக்ஸ் ஃபெடரேஷன் என்று அழைக்கப்படும் அமைப்பு, பாலியலில் யார் சிறந்தவர் என்பதைத் தீர்மானிக்க, போட்டியாளர்கள் ஆறு மணி நேரம் வரை போட்டிகளில் ஈடுபடுவார்கள் என்றும் இந்த செய்திகளில் கூறப்பட்டிருந்தது.

எனினும் இந்த செய்தியை மறுத்துள்ள சரிபார்ப்பு இணையம், பாலியலை விளையாட்டாக அங்கீகரிக்கக் கோரும் விண்ணப்பத்தை ஸ்வீடன் நிராகரித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.