தமிழ் பொதுவேட்பாளர் அறிவிப்பு: தென்னிலங்கையின் பங்களிப்பு என்ன?
2024ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளராக களமிறங்கப் போவது யார் என்னும் கேள்வி பலரின் மத்தியிலும் எழுந்து நிற்கின்றது.
இந்த நிலையில், தமிழ்ப் பொது வேட்பாளராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன் போட்டியிடவுள்ளதாக தகவல்களும் கசிந்துள்ளன.
மேலும், பலரின் ஆதரவுடனும் எதிர்ப்புடனும் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த தமிழ் வேட்பாளர் தெரிவில் மக்களின் ஆதரவு எவ்விதம் பங்களிப்புச் செய்யவுள்ளதெனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
இது வரை காலமும் தமிழ் மக்கள் தங்களது, பங்களிப்பை தென்னிலங்கை அரசியல்வாதிகளுக்கும் வழங்கியிருந்தனர்.
தென்னிலங்கையில் தமிழ் பொது வேட்பாளருக்கு எவ்வாறான ஆதரவு இருக்கும்,
ரணில், அனுர, நாமல் உள்ளிட்ட பெரும்பான்மை வேட்பாளர்களுக்கு மத்தியில் தமிழ் பொது வேட்பாளர் எவ்வாறு மக்களின் ஆதரவை பெறப்போகிறார் என்பது கேள்விக்குறியான விடயமாக இருக்கின்றது.
அவ்வாறே வடக்கு கிழக்கு மக்கள் தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவை வழங்கினாலும், தென்னிலங்கையில் கிடைக்கும் ஆதரவே வெற்றிக்கு வழி வகுக்கும் என்பது திண்ணம்.