தொழிலாளர்களின் வேதனம் 2000ரூபாயாக வேண்டும் - இல்லையேல் மலையகம் முழுவதும் போராட்டம்!

தொழிலாளர்களின் வேதனம் 2000ரூபாயாக வேண்டும் - இல்லையேல் மலையகம் முழுவதும் போராட்டம்!

நாட்டில் தற்போதைய வாழ்க்கைச் செலவுக்கு ஏற்ப பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த வேதனத்தை அதிகரிக்குமாறு கோரி டயகம நகரில் இன்று பிற்பகல் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

தமிழ் முற்போக்குக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் தலைமையில் இடம்பெற்ற இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

இந்த போராட்டத்தில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம், பெருந்தோட்ட தொழிலாளர் ஒருவரின் நாளாந்த வேதனத்தை ஆயிரத்து 750 ரூபாவாக அதிகரிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தோட்ட நிறுவனங்களுக்கு ஆலோசனை வழங்கிய போதும் இதுவரை சம்பளம் கிடைக்கவில்லை என குறிப்பிட்டார்.

நாட்டின் வாழ்க்கைச் செலவுக்கு ஏற்ப குறித்த நாளாந்த வேதனம் இரண்டாயிரம் ரூபாயாக அதிகரிக்கப்பட வேண்டுமெனவும் உரிய தீர்வு கிடைக்காவிடின் மலையகம் முழுவதும் தொழிற்சங்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.