பொலிஸ் மா அதிபராக கடமைகளை பொறுப்பேற்கும் தேசபந்து தென்னகோன்!

நாட்டின் 36 ஆவது பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ள தேசபந்து தென்னகோன் இன்று தமது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார்.
அண்மையில், ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்கவினால் பொலிஸ் மா அதிபருக்கான நியமனக்கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
பொலிஸ் மா அதிபர் கடமைகளை பொறுப்பேற்பதற்காக பொலிஸ் தலைமையகத்தில் அணிவகுப்பும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் பொலிஸ் மா அதிபர் சீ.டி விக்ரமரட்ன கடந்த வருடம் மார்ச் 25ஆம் திகதி ஓய்வு பெறவிருந்தார்.
எவ்வாறாயினும், அவர் குறித்த பதவியில் 4 தடவைகள் நீடிக்கப்பட்டிருந்தார்.
இந்தநிலையில், சீ.டி விக்ரமரட்ன கடந்த வருடம் நவம்பர் மாதம் 29ஆம் திகதியுடன் ஓய்வு பெற்ற நிலையில், பொலிஸ் மா அதிபருக்கான வெற்றிடம் ஏற்பட்டிருந்தது.
குறித்த காலப்பகுதியில் பதில் பொலிஸ் மா அதிபராக தேசபந்து தென்னகோன் நியமிக்கப்பட்டார்.
இந்தநிலையில், அவர் புதிய பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்;டுள்ள நிலையில், இன்றைய தினம் தமது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார்.