அத்துமீறும் மீனவர்கள் அழுத்தத்தின் பேரில் விடுதலை - சாந்தனை ஏன் கைவிட்டீர்கள்? கோமகன் கேள்வி

அத்துமீறும் மீனவர்கள் அழுத்தத்தின் பேரில் விடுதலை - சாந்தனை ஏன் கைவிட்டீர்கள்? கோமகன் கேள்வி

சட்டரீதியாக கைது செய்யப்படும் இந்திய மீனவர்களை இந்திய அரசின் அழுத்தத்தின் பேரில் விடுதலை செய்கின்ற போது விடுதலை செய்யப்பட்ட சாந்தனை ஏன் நாட்டுக்கு அழைத்து வருவதற்கு முடியவில்லை என குரல் அற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முருகையா கோமகன் கேள்வி எழுப்பியுள்ளார்.

யாழ்ப்பாண ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 அதே நேரத்தில் குடி வரவு குடியகல்வு திணைக்களங்கள் இந்த சம்பவம் தொடர்பில் வினைத்திறனுடன் செயல்பட்டு இருந்தால் சாந்தனை உயிரோடு ஒப்படைத்திருக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சாந்தனின் மரணத்திற்கு இந்திய, இலங்கை அரசுகளும் தமிழ் தலைமைகளுமே பொறுப்பேற்க வேண்டும் என குரல் அற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முருகையா கோமகன் தெரிவித்துள்ளார்.

அத்துடன், சாந்தனின் உடலுக்கு ம.தி.மு.க., பொது செயலாளர் வைகோ, வி.சி., தலைவர் திருமாவளவன், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

ராஜிவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து, உயர் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட பேரறிவாளன், நளினி ஆகியோரும் அவரது உடலுக்கு  அஞ்சலிசெலுத்தினர்.