கடவுச்சீட்டு கிளை அலுவலகங்களுக்கு முன்பாக கடும் வாகன நெரிசல்!

கடவுச்சீட்டு கிளை அலுவலகங்களுக்கு முன்பாக கடும் வாகன நெரிசல்!

நாளாந்தம் கடவுச்சீட்டுகளுக்காக விண்ணப்பிக்க அதிகளவான மக்கள் செல்வதால் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் கண்டி மற்றும் குருநாகல் கிளை அலுவலகங்களுக்கு முன்பாக கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்கு அந்த இடங்களில் பொலிஸ் பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது.

குடிவரவுத் திணைக்களத்தின் பிராந்திய அலுவலகங்கள் ஒரு நாள் சேவையின் கீழ் 200 கடவுச்சீட்டுகளையும் வழக்கமான சேவையின் கீழ் 100 முதல் 150 கடவுச்சீட்டுகளையும் வழங்குகின்றன.

அந்த எண்ணிக்கையை அதிகரித்துள்ளதன் காரணமாகவே இந்த வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், கொழும்பில் உள்ள தலைமை அலுவலகம் வருகை தரும் அனைவருக்கும் கடவுச்சீட்டுக்களை வழங்கும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில், கடவுச்சீட்டுக்களை பெறுவதற்காக ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குழு வரிசையில் காத்திருந்து அனுமதிச் சீட்டுக்களுக்கான எண்களைப் பெற்றுக்கொண்டு  கடவுச்சீட்டு பெற வருபவர்களிடம் அந்த எண்களை கொடுத்து பணம் வசூலிப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.