தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் வடக்கில் அனுஷ்டிப்பு!
தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் அவர் கல்வி கற்ற யாழ் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தில் இன்று மதியம் 12:30 மணியளவில் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் மாணவர் பேரெழுச்சியுடன் அனுஷ்டிக்கப்பட்டது.

இதன்பொழுது ஒரு நிமிட அகவணக்கம் செலுத்தி தொடர்ச்சியாக தியாக தீபத்தின் தியாக வரலாற்று பேருரை முன்னெடுக்கப்பட்டு தொடர்ச்சியாக மலரஞ்சலி செலுத்தி ஈகைசுடர் மாணவர்களால் ஏற்றப்பட்டது.
இதன்பொழுது யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர், பல்கலைக்கழக மாணவர்கள், கல்வி சாரா ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதனிடையே, ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 36ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்றையதினம்( 15) யாழ்ப்பாணம், நல்லூர் பகுதியில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் ஆரம்பமானது.
முன்னாள் போராளியான விடுதலை அவர்கள் பொதுச் சுடர் ஏற்றியதை தொடர்ந்து, மலர் மாலை அணிவிக்கப்பட்டு தியாக தீபம் திலீபனின் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
மேலும் சமநேரத்தில் நல்லூரில் உண்ணாவிரதத்தை ஆரம்பித்த இடத்திலும் நினைவேந்தல் கடைப்பிடிக்கப்பட்டது.