பணம் பெற்று விருது வழங்கும் மாஃபியா மோசடி – ஏமாற்றப்படும் கலைஞர்கள், அரசியல்வாதிகள், ஊடகவியலாளர்கள்!

இலங்கையில் பணம் பெற்று விருதுகளை வழங்கும் வர்த்தக மற்றும் மாஃபியா நோக்கிலான சம்பவங்கள் அதிகரித்து வருவதை அவதானிக்க முடிகின்றது.

பணம் பெற்று விருது வழங்கும் மாஃபியா மோசடி – ஏமாற்றப்படும் கலைஞர்கள், அரசியல்வாதிகள், ஊடகவியலாளர்கள்!

இந்த விருது வழங்கும் செயற்பாடானது, கொழும்பில் மாத்திரமன்றி, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்று வருவதை காணக்கூடியதாக உள்ளது.

குறிப்பாக அழகு கலை நிபுணர்கள் என அடையாளப்படுத்திக் கொள்ளும் சிலரே இவ்வாறு விருதுகளை வழங்கி வருவதாக அறிய முடிகின்றது.

அழகு கலைத்துறைக்குள் பிரவேசித்து, ஆரம்ப கல்வியை தொடரும் மற்றும் தமது துறையில் ஆரம்ப தடம் பதிக்கும் அனுபவமில்லாத அழகுக்கலைத் துறை சார்ந்தோரை தேர்வு செய்து இந்த விருதை வழங்குகின்றார்கள்.

இந்த நடவடிக்கையானது, தற்போது மாபெரும் மாஃபியாவாக உருவெடுத்து வருகின்றது.

இந்த நிலையில், கொழும்பு நட்சத்திர விருந்தகம் ஒன்றில் அண்மையில் நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்வானது, விருது பெற்றுக் கொள்வோரிடமிருந்து பல்லாயிரக்கணக்கான ரூபாயை வசூலித்துக் கொண்டே விருதுகளை வழங்கி வைத்துள்ளனர்.

சர்வதேச விருது வழங்கும் போர்வையில், இந்த முறையற்ற செயற்பாடு முன்னெடுக்கப்பட்டு வருவதாக குற்றஞ்சுமத்தப்படுகின்றது.

ஒவ்வொரு விருதுகளுக்கும் ஒவ்வொரு தொகை அறவிடப்பட்டுள்ளமை குறித்த தகவல்களை, விருதுகளை பெற்ற சிலர் ஊடகங்களுக்கு வெளியிட்டனர்.

இதன்படி, 8 வகையான விருதுகள், வெவ்வேறு தொகைகளை பெற்று வழங்கப்பட்டுள்ளன.

20,000 ரூபா முதல் 80,000 ரூபா வரை பணம் அறவிடப்பட்டுள்ளதாக, விருதுகளை பெற்றுக்கொண்டவர்கள் கூறியுள்ளனர்.

விருதுகளின் விலை பட்டியல் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

  • Special award - 30000
  • Skills awards - 20000
  • Iconic award - 25000
  • Popular award - 45000
  • Prestigious award - 45000
  • Excellence award - 45000
  • Expert award - 50000
  • Life time achievement - 80000

தென்னிந்திய பிரபல்யங்களை அழைத்து வந்து, இந்த விருதுகளை வழங்குவதாக கூறியே, இந்த விருதுகளை பெற்றுக்கொள்வோரிடமிருந்து பணங்களை அறவிட்டுள்ளனர்.

இதன்படி, தென்னிந்திய பிரபல நடிகை ஒருவரை அழைத்து வந்து இந்த விருதை வழங்கி வைத்துள்ளனர்.

இவ்வாறு விருதுகளை பெற்றுக் கொள்வதற்காக பணம் வழங்கியவர்களில் பலருக்கு, உறுதி வழங்கியவாறு விருதுகள் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டொன்றும் தற்போது முன்வைக்கப்பட்டுள்ளது.

அழகு கலை துறை சார்ந்தோர் மாத்திரமன்றி, அரசியல்வாதிகள், சமூக செயற்பாட்டாளர்கள், கலைஞர்கள், ஊடகவியலாளர்கள் என பலரும் இந்த விருது வழங்கும் நிகழ்வில் கலந்துக்கொண்டு, விருதுகளை பெற்றுக்கொண்டிருந்ததை அவதானிக்க முடிந்தது.

விருதுகள் எப்படி வழங்கப்பட வேண்டும்?

எவரேனும் ஒருவர் கௌரவிக்கப்பட வேண்டும் என்ற எண்ணம் கொள்வோர், கௌரவிக்கப்படுவோரிடமிருந்து பணத்தை பெற்றுக்கொள்ளாது, தமது பணத்தையோ அல்லது அனுசரனையாளர்களின் உதவியுடனோ நிகழ்வுகளை நடத்தி, கௌரவிக்கப்பட வேண்டும்.

அவ்வாறு இல்லையென்றால், போட்டிகளை வைத்து, அதனூடாக தெரிவாவோருக்கு விருதுகளை வழங்க வேண்டும். அதுவும் விருதுகளை வழங்குவதற்காக விருதுகளை பெறுவோரிடமிருந்து பணத்தை பெற்றுக்கொள்வது தவறானதாகும்.

விருது வழங்கும் மாஃபியா…

இலங்கையில் கடந்த சில காலமாகவே விருது வழங்கும் நிகழ்வுகளின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளது.

இந்த விருது வழங்கும் நிகழ்வுகளுக்காக பல கோடி ரூபா மோசடி இடம்பெற்று வருவதாக கூறப்படுகின்றது.

கலைஞர்கள், அழகு கலை நிபுணர்கள், அரசியல்வாதிகள், சமூக செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள் என நாட்டிலுள்ள பிரபல்யங்களை அடையாளம் கண்டு, இந்த மோசடியில் சில தரப்பினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இலங்கையில் விருது வழங்கும் நிகழ்வுகள் நடாத்தப்பட வேண்டும் என்றால், புத்தசாசன, சமய விவகார மற்றும் கலாசார அமைச்சின் அங்கீகாரத்தை பெற்று, விருதுகளை வழங்கினால், அது நாட்டின் கௌரவத்திற்கும், விருதுக்கான கௌரத்திற்கும் அங்கீகாரத்தை வழங்கும் என்பதே புத்திஜீவிகளின் கருத்தாகும்.

எனினும், விருது வழங்குவதற்காக சட்டங்கள் மற்றும் விதிமுறைகள் இல்லாமையினால், பணம் உழைத்துக் கொள்ளும் நோக்குடன் சில தரப்பினர் இந்த விருது வழங்கும் நிகழ்வுகளை, மோசடியான முறையில் செய்து வருகின்றனர்.

இந்த விருது வழங்கும் நிகழ்வுகளில் விருதுகளை பெற்றுக்கொள்வோர் கௌரவிக்கப்படுவதற்கு பதிலாக, விழாவை நடாத்துவோர் கோடிக்கணக்கில் பணத்தை உழைக்கின்றனர் என்பதே உண்மை.

இலங்கையில் பணத்தை வழங்கி, விருதுகளை பெற்றுக்கொள்ளும் நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதே கோரிக்கையாக அமைகின்றது

நன்றி : Trueceylon இணையம்.. 

Available At All Food cities..

உங்கள் மூட்டு வலி, முழங்கால் வலி, முடக்குவாதம் ஆகியவற்றிற்கு நீங்கள் இன்னும் தற்காலிக தீர்வுகளைத் தேடுகிறீர்களா? நீண்ட கால தீர்வுக்கு அர்ஜுனா எண்ணெய் தயாரிப்பை இப்போதே நாடுங்கள்.

அர்ஜுனா எண்ணையை மூன்று மாதங்களுக்கு ஒரு நாளைக்கு இரண்டு முறை தடவினால் உங்கள் வலிகள் நீங்கி புத்துணர்ச்சி கிடைக்கும்.

அர்ஜுனா ஆயுர்வேத எண்ணை, ஒரு இந்திய இயற்கை செய்முறையின் படி தயாரிக்கப்பட்டது. இது சிறந்த பயனுள்ள முடிவுகளை வழங்கும். இது ஆயுர்வேத திணைக்களத்தின் அங்கீகரிக்கப்பட்ட எண்ணை ஆகும்.