கனடா குடிமக்களுக்கு மறு அறிவிப்பு வரை விசா வழங்கல் இடை நிறுத்தம்!
கனடாவின் குடிமக்களுக்கு விசா வழங்குவதை மறு அறிவிப்பு வரும் வரை இந்தியா இடை நிறுத்தியுள்ளது.

கனடாவின் குடிமக்களுக்கு விசா வழங்குவதை மறு அறிவிப்பு வரும் வரை இந்தியா இடை நிறுத்தியுள்ளது.
இதனை, கனேடிய நாட்டினரின் விசா விண்ணப்பங்களின்,ஆரம்ப ஆய்வுக்காக பணியமர்த்தப்பட்ட BLS இன்டர்நேஷனல் என்ற தனியார் நிறுவனம் அறிவித்துள்ளது.
"செயல்பாட்டு காரணங்களால் இந்திய விசா சேவைகள் மறு அறிவிப்பு வரும் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் கூறியுள்ளது.
காலிஸ்தான் சார்பு சீக்கிய தலைவரான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையில் புதுடில்லியின் முகவர்களைத் தொடர்புபடுத்தும் "நம்பகமான குற்றச்சாட்டுகள்" தன்னிடம் இருப்பதாக கனடா கூறியுள்ளதை அடுத்தே இந்த பதற்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
எனினும் இந்திய அரசாங்கம் இந்த குற்றச்சாட்டை அபத்தமானது என்று உறுதியாக நிராகரித்துள்ளது.
இதேவேளை, பாதுகாப்பு நிலைமையை கருத்தில் இந்தியாவில் உள்ள தமது ராஜதந்திரிகளின் எண்ணிக்கையை கனடா குறைத்துள்ளது.