இன்றைய வானிலை அறிக்கை

இன்றைய வானிலை அறிக்கை

காலி, மாத்தறை, களுத்துறை, இரத்தினபுரி, அம்பாறை, மாத்தளை மற்றும் பதுளை ஆகிய மாவட்டங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் சிறிதளவு மழை பெய்வதற்கான சாத்தியம் காணப்படுகிறது.

நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படலாம்.

காற்று:

காற்று வடகிழக்கு திசையில் வீசும் மற்றும் வேகம் மணிக்கு (20-30) கி.மீ. வரை காற்றின் வேகம் அதிகரிக்கலாம்.

கொழும்பிலிருந்து புத்தளம் ஊடாக மன்னார் வரையிலும் மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலும் கடற்பரப்புகளுக்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் அவ்வப்போது காற்றின் வேகம் மணித்தியாலத்துக்கு (40-45) கி.மீ ஆக காணப்படும்.

கடல் நிலை:

கொழும்பில் இருந்து புத்தளம் ஊடாக மன்னார் வரையிலும் மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளும் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாக காணப்படும்.