இலங்கையில் கடவுச்சீட்டு பெறுவது மட்டுப்படுத்தப்பட்டது!
கடவுச்சீட்டு அச்சிடும் புத்தகங்கள் தீர்ந்துவிட்டதால், தினசரி வழங்கப்படும் கடவுச்சீட்டுகளின் எண்ணிக்கை 250 ஆக மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக குடிவரவுத் திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், திகதி மற்றும் நேரத்தை முன்பதிவு செய்யாமல் வரும் 30 பேருக்கு மட்டுமே கடவுச்சீட்டு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
விமான அனுமதிக்கான இ-பாஸ்போர்ட் முறையை உருவாக்க முடிவு செய்ததால், இந்த ஆண்டுக்கு தேவையான புத்தகங்கள் வாங்கப்படவில்லை.
ஆனால், ஜூலையில் வரவிருந்த இ-பாஸ்போர்ட் புத்தகங்கள் அக்டோபர் வரை தாமதமானதால், குடிவரவுத் துறைக்குச் சொந்தமான பாஸ்போர்ட் புத்தகங்களின் அளவு குறையத் தொடங்கியது. இதன் காரணமாக கடவுச்சீட்டு வழங்குவதை முடிந்தவரை மட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தினமும் சுமார் 1,300 பாஸ்போர்ட்டுகள் அச்சிடப்பட்டாலும், தற்போது அது 250 முதல் 300 வரை குறைந்துள்ளது.
அவசர தேவை இல்லாவிட்டால் ஒக்டோபர் மாதம் வரை கடவுச்சீட்டு விண்ணப்பங்களை மேற்கொள்ள வேண்டாம் என குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் ஜெனரல் ஹர்ஷ இலுக்பிட்டிய அண்மையில் தெரிவித்திருந்தார்.
இதனால் ஏற்பட்டுள்ள மன அழுத்த சூழ்நிலை காரணமாக குடிவரவு குடியகழ்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் சமர்ப்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது