சிலிண்டரை சின்னமாக்கிய ரணில் - காரணம் வெளியானது!

சிலிண்டரை சின்னமாக்கிய ரணில் - காரணம் வெளியானது!

இந்த தருணத்தில் சிலிண்டர் சின்னமே மிகப் பொருத்தமானது என்று ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக களமிறங்கியிருக்கும் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு சிலிண்டர் சின்னம் தெரிவு செய்யப்பட்டுள்ளது. 'யானை' இல்லாமல் 'சிலிண்டர்' தெரிவு செய்யப்பட்டதன் காரணம் என்ன என்பது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடத் தீர்மானித்தேன். கட்சி சாராமல் செயற்பட வேண்டும் என்ற வலுவான கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது.

அதற்கேற்ப அரசியல் ரீதியாக புதிதாக சிந்திக்க வேண்டும். பல குழுக்களுடன் இணைந்து செயற்பட்டதால் இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட தீர்மானித்தேன்.

சுயேட்சை வேட்பாளர் எந்தச் சின்னத்தையும் தெரிவு செய்யலாம். இத்தருணத்தில் சிலிண்டர் சின்னமே மிகப் பொருத்தமானதாகும் என குறிப்பிட்டுள்ளார்.