உலக அதிசயத்தின் ஒரு பகுதியை சேதப்படுத்திய இருவர் சீனாவில் கைது!
உலக அதிசயங்களில் ஒன்றான சீனப் பெருஞ்சுவரின் ஒரு பகுதியை சேதப்படுத்திய ஆணும் பெண்ணும் சீனாவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வடக்கு ஷான்சி மாகாணத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
யூகவுண்டியில் உள்ள சீனப் பெரிய சுவரின் ஒரு பகுதி சேதமாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
விசாரணைகளுக்கு அமைய, 38 வயது ஆண் ஒருவரும் 55 வயது பெண் ஒருவரும் கைதாகியுள்ளனர்.
அகழ்வாராய்ச்சி பணிகளில் ஈடுபட்ட இருவரும் குறுக்குப் பாதையொன்றை உருவாக்குவதற்காக சுவரை சேதப்படுத்தியுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
1987ஆம் ஆண்டில், சீனப் பெருஞ்சுவர் யுனெஸ்கோ அமைப்பினால் உலக பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டது.