பாதாள உலக குழு உறுப்பினர் ரத்கம விதுரவிற்கு உதவிய தேரர் கைது!

”ரத்கம விதுர” என்ற பாதாள உலக குழு உறுப்பினருக்கு உதவியதாக சந்தேகிக்கப்படும் தேரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர், கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 18 ஆம் திகதி ஹங்வெல்ல பகுதியில் நபரொருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய "புரு மூனா" என்பவரை பொலிஸ் நிலையத்தில் இருந்து தப்பிச் செல்ல உதவி செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது மேலும் 6 பேருடன் இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.