வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தில் வழிபாட்டுக்கு அனுமதி வேண்டும்!
வவுனியா வடக்கு வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தில் கடந்த 08ஆம் திகதி சிவராத்திரி பூசை வழிபாடுகளில் ஈடுபட்டிருந்த ஆலய பூசகர் உள்ளிட்ட எட்டு பேர் நெடுங்கேணி பொலிஸார் கைது செய்து விளக்கமறியலில் வைக்கப்பட்டமை தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதன் தெரிவித்த கருத்து.