அம்பானியின் இல்லத்தில் கொடியை நாட்டிய இலங்கை சமையல் குழுவினர்!

அம்பானியின் இல்லத்தில் கொடியை நாட்டிய இலங்கை சமையல் குழுவினர்!

இந்தியாவின் மிக முக்கிய தனவந்தர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் இல்லத்தில் இடம்பெற்ற திருமண நிகழ்வில் இலங்கையின் சில முன்னணி சமையல் கலைஞர்கள் கலந்து கொண்டனர்.

இது குறித்து அவர்கள் தங்களின் முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 

“கடந்த ஒரு வாரமாக மிகவும் ரகசியமாக பாதுகாத்து வருகிறோம்!!

சிட்ரஸில் இருந்து பதின்மூன்று நட்சத்திரங்கள் கொண்ட A-குழுவினர், குஜராத்தின் ஜாம் நகரில் எதிர்பாராத சாகசத்தை நிகழ்த்திவிட்டு இந்தியாவில் இருந்து கொழும்புக்குத் திரும்பியுள்ளனர். 

சம காலத்தில் மிகப் பெரிய திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்களில் சமையல் துறைக்கு நாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டது எங்களின் முழுமையான பாக்கியமாக கருகிறோம்.

சிலோன் கறி கிளப், ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் ஆகியோரின் திருமண கொண்டாட்டத்தில் கலந்து கொண்டது பெரும் சாதனையாக அமைந்துள்ளது.

இதன்போது, இலங்கை ஃப்யூஷன் உணவு வகைகளில் இருந்து அவர்களுக்கு பிடித்தவற்றைத் தேர்ந்தெடுத்து சமைத்து பறிமாறப்பட்டது.

Ceylon Curry Club இன் ஊடாக முதலில் ஒரு மதிய உணவு சேவையை மாத்திரம் வழங்க திட்டமிடப்பட்ட போதும், எங்களின் உணவு வகைகள் மற்றும் சேவைக்கு கிடைத்த அமோகமான நேர்மறையான வரவேற்பின் காரணமாக, தொடர்ந்து இரண்டாவது நாளாக உணவுகளை பறிமாறும்படி கேட்டுக்கொள்ளப்பட்டதில் நாங்கள் மிகவும் வியப்படைந்தோம்.

நமது இலங்கையின் கொடியை உயரத்தில் பறக்கவிட இந்தியாவில் அயராது உழைத்த குமுது மற்றும் செஃப் பாண்டு தலைமையிலான குழுவினருக்கு வாழ்த்துகள்” என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.