கணவரை தீயிட்டு கொலை செய்த பெண் ஒருவர் கைது!
மொரட்டுவ - மொரட்டுமுல்ல பகுதியில் கணவரை தீயிட்டு கொலை செய்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மொரட்டுவ - மொரட்டுமுல்ல பகுதியில் கணவரை தீயிட்டு கொலை செய்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகத்துக்குரிய பெண் நேற்று (25) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த 18 ஆம் திகதி கணவன், மனைவிக்கிடையில் ஏற்பட்ட குடும்பத்தகராறு காரணமாக மனைவி அவன் மீது தீயிட்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது
தீக்காயங்களுக்குள்ளான நிலையில் சிகிச்சைப்பெற்று வந்த கணவர் கடந்த 23 ஆம் திகதி உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.