பலாங்கொடையில் பல பிரதேசங்களில் காட்டு தீ!
பலாங்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெலேகும்புர வனப் பகுதியில் ஏற்பட்ட காட்டு தீயினால் மூன்று ஏக்கர்

பலாங்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெலேகும்புர வனப் பகுதியில் ஏற்பட்ட காட்டு தீயினால்
மூன்று ஏக்கர் வனப்பகுதி தீயினால் சேதமடைந்துள்ளது.
அத்தோடு பலாங்கொடை கல்தோட்ட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்தோட்ட, தியாவின், வெளிபத்த வனப்பகுதிகளில் ஏற்பட்ட பாரிய காட்டு தீயினால் ஆயிரம் ஏக்கர் வனப்பகுதி தீக்கிரையாகி உள்ளதாக கல்தோட்ட பொலிஸ் தெரிவித்தனர் .