மாகாண சபை தேர்தலை முன்னெடுப்பது தொடர்பில் இறுதியான தீர்மானத்தை எட்டமுடியாத நிலை!
பழைய முறைமையிலா, அல்லது புதிய விகிதாசார முறைமையிலா மாகாண சபை தேர்தலை நடத்துவது என்பது தொடர்பில் இறுதியான தீர்மானத்தை எட்டமுடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரிவிந்த் குமார் தெரிவித்துள்ளார்.

நுவரெலியாவில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம், ஆயிரத்து 987ஆம் ஆண்டு ஆறில் 5 பெரும்பான்மையுடன் கொண்டு வரப்பட்ட 13ஆம் திருத்தச்சட்டத்தை மீண்டும் நாடாளுமன்றத்துக்கு முன்வைக்க வேண்டிய அவசியமிருக்காது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு - வாவிக்கரை பகுதியில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்தே நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.