மழை காலநிலை சீரடையுமா? - மேலும் இரண்டு காற்றழுத்தங்கள் உருவாக்கம்!

மழை காலநிலை சீரடையுமா? - மேலும் இரண்டு காற்றழுத்தங்கள் உருவாக்கம்!

தென்மேற்கு வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் காணப்பட்ட காற்று சுழற்சியானது இலங்கையின் தெற்காக நகர்ந்து, தற்போது குமரிமுனை (Cope Comorin) கடலுக்கும் மாலைதீவு பகுதிக்கும் இடையில் நகர்ந்து கொண்டிருக்கின்றது. 

இது இலங்கையை விட்டு அப்பால் நகர்ந்து கொண்டிருப்பதன் காரணத்தினால் நாளை முதல் இந்த மழை கொண்ட காலநிலை சீரடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதன் பின்னர் மேலும் ஒரு நிகழ்வானது (காற்று சுழற்சி) சுமாத்திர தீவு பகுதி அருகே உருவாகி இலங்கை பக்கம் நகரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதன் காரணத்தினால் எதிர்வரும் 08ஆம் திகதி முதல் 12ஆம் திகதி வரையான காலப் பகுதிக்குள் ஒருசில நாட்களுக்கு மழை பெய்யும் சாத்தியம் காணப்படுகின்றது.

இதன் பின்னர் எதிர்வரும் தைப்பொங்கல் நிகழ்வின் பின்னர் எதிர்வரும் 17ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரையான காலப்பகுதியில் மேலும் ஒரு காற்று சுழற்சியும் உருவாகும் சாத்தியமுள்ளது. 

அதுமட்டுமல்லாது எதிர்வரும் 27ஆம் திகதி முதல் 29ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இன்னும் ஒரு காற்று சுழற்சியும் உருவாகி மழை தருவதற்கான சாத்தியம் காணப்படுகின்றது.

இதில் எதிர்வரும் 17ஆம் திகதி முதல் 21ஆம்  திகதி வரையான காலப் பகுதியில் உருவாகும் காற்று சுழற்சியினால் சற்று அதிகமான மழை எதிர்பார்க்கப்படுகின்றது

இவை அனைத்தும் இன்றுள்ள வானிலை அமைப்பின்படியே எதிர்பார்க்கப்படுகின்றது. இதன் உறுதித் தன்மைகள் வரும் நாட்களில் உறுதிப்படுத்தப்படும் ஓய்வு நிலை மூத்த வானிலை ஆய்வாளர் சூரியமாரன் தெரிவித்துள்ளார்.