பழைய மீன்களை காட்டு பகுதியில் வீசிய போது சிக்கியவர்கள்?  

பழைய மீன்களை காட்டு பகுதியில் வீசிய போது சிக்கியவர்கள்?  

கிளினிங் ஸ்ரீ லங்கா திட்டம் இன்று உதயமாகுவதற்கு முன் நகரங்களில் உள்ள மீன் வியாபார நிலையங்களில் இருந்து அகற்றப்படும் கழிவு பொருட்களுடன் குழுவொன்றை அம்புலாவ பகுதியில் உள்ள இளைஞர்கள் மடக்கி பிடித்துள்ளனர்.

புதிய ஆண்டு உதயத்தை அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில்  அம்புலுலாவ பிரதேச மக்கள் உறங்காமல் இருந்து  பழைய  மீன்களை இங்கு வந்து வீசும் நபர்ளை கையும் களவுமாக பிடித்துள்ளனர்.

அம்புலாவ காட்டு பகுதியில் பழைய மீன்களை வீசி கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் சிறிய ரக வாகனமொன்றையும் கைப்பற்றியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து காட்டுப் பகுதியில் வீசப்பட்ட கழிவு மீன்களை அந்த இடத்தில் இருந்து அவர்களையே சேகரிக்கவும் செய்துள்ளனர். 

குறித்த பிரதேச மக்கள் இன்று அதிகாலை இந்த முயற்சியை முறியடித்ததுடன், பழைய மீன்களை ஏற்றி வந்த லொறியையும் சந்தேகநபர்களையும் கம்பளை பொலிஸ் நிலையத்திடம் ஒப்படைத்தனர்.

மேலதிக விசாரணைகளை கம்பளை பொலிஸார்  மேற்கொண்டு வருகின்றனர்.