சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்பாடுகள் தாெடர்பில் விளக்கம் கோரல்
சர்வதேச நாணய நிதியத்துடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் நாடாளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்டாத நிலையில், நீட்டிக்கப்பட்ட கடன் சலுகையின் கீழ் முன்வைக்கப்பட்ட கோரிக்கை மாத்திரம் நாடாளுமன்றிற்கு முன்வைக்கப்பட்டுள்ளதாக லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் உரையாற்றிய போதே எதிர்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல இதனை தெரிவித்தார்.
சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கடன் பெறுவது தொடர்பில் நாடாளுமன்றில் விவாதங்கள் இடம்பெற்று வருகின்றன.
இந்த நிலையிலேயே எதிர்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அத்துடன் சர்வதேச நாணய நிதியத்துடன் செய்துக்கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தத்தில் முன்வைக்கப்பட்டுள்ள நிபந்தனைகளையே தாம் கோருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவைத்தலைவர் சர்வதேச நாணய நிதியத்தின் கடன் தொடர்பில் கருத்துரைக்கின்ற போதிலும், இதுவரையில் ஒப்பந்தம் சபைக்கு சமர்ப்பிக்கப்படவில்லை.
நீட்டிக்கப்பட்ட கடன்வசதியின் கீழ் முன்வைக்கப்பட்ட கோரிக்கை அடங்கிய கோவையே நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டுள்ளது.
முன்வைக்கப்படவேண்டிய ஒப்பந்தம் இதுவரை முன்வைக்கப்படவில்லை.
ஒப்ந்தம் சபையில் சமர்ப்பிக்கப்படாத நிலையிலேயே நாங்கள் வாதப்பிரதிவாதங்களை நடத்துவதற்காக ஒன்று கூடியுள்ளோம்.
ஜனாதிபதியிடம் நாங்கள் பல தடவைகள் கோரிக்கை விடுத்திருக்கின்றோம்.
எனினும் இதுவரை சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தமோ, அதில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் அடங்கிய ஆவணமோ இதுவரை சபை உறுப்பினர்களுக்கு வழங்கப்படவில்லை.