கொழும்பு இரண்டாம் குறுக்கு தெரு புடவையகத்தில் தீப்பரவல் - 17 பேர் காயம்
கொழும்பு இரண்டாம் குறுக்கு தெருவில் உள்ள புடவையகம் ஒன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக ஏழு தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்படுவதாக கொழும்பு தீயணைப்பு சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தீப்பரவலுக்கான காரணம் குறித்த பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிந்திக் கிடைத்த தகவல்களின் தீப்பரவல் தற்போது கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில் காயமடைந்த 17 பேர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் ஆறு பேர் ஆபத்தான நிலையில் உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.