நிதி நிறுவனம் மூலம் பண மோசடியில் ஈடுபட்டவர் கைது!

இலங்கை மத்திய வங்கியின் அனுமதியின்றி, நிதி நிறுவனம் ஒன்றை நடத்தி பெருந்தொகையான பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டில் கண்டியைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர், நிதிக் குற்ற விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

மத்திய வங்கியின் அனுமதியின்றி, நடத்திச் செல்லப்பட்ட நிறுவனத்தின் ஊடாக குறித்த நபர் 9 ஆயிரத்து 900 மில்லியன் ரூபாவை மோசடி செய்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர் கண்டிவிவ் கார்டன் பகுதியைச் சேர்ந்த 54 வயதுடையவர் என பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.