தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!
அண்மையில் நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் முதல் வினாத்தாளில் மூன்று கேள்விகள் கசிந்தமை தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகள் தொடர்பான விரிவான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு (CID) உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதன்படி நாளை (19) காலை 9.00 மணிக்குள் விரிவான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு நீதிமன்றம் பணிப்புரை விடுத்துள்ளது.முன்னதாக, கடந்த 16ஆம் திகதி தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை மீணடும் நடத்துவதற்கு உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
குறித்த அடிப்படை உரிமை மனுக்கள் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களால் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.