பொருளாதாரம் - கடன் நிலைத்தன்மையை அடைந்தால் இலங்கையை செழுமைக்கான பாதையில் கொண்டு செல்ல முடியும்
பொருளாதாரம் - கடன் நிலைத்தன்மையை அடைந்தால் இலங்கையை செழுமைக்கான பாதையில் கொண்டு செல்ல முடியும் என்று சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்
பொருளாதாரம் - கடன் நிலைத்தன்மையை அடைந்தால் இலங்கையை செழுமைக்கான பாதையில் கொண்டு செல்ல முடியும் என்று சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்
எனவே நிதி ஸ்திரத்தன்மையை பாதிக்காமல் உள்நாட்டு கடனை மறுசீரமைக்கும் சவாலை இலங்கை எதிர்கொள்ள வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.
சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய மற்றும் பசிபிக் திணைக்களத்தின் பணிப்பாளர் கிருஷ்ண சீனிவாசன் இந்தக்கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
இலங்கைக்கான 17வது சர்வதேச நாணய நிதிய தற்போதைய திட்டமானது, பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் பணவீக்கத்தைக் குறைப்பதை வலியுறுத்துவதாக அமைந்துள்ளது.
பணவீக்கம் என்பது ஏழைகள் மீதான வரியாகும். இந்தநிலையில் இலங்கையில் பணவீக்கம் குறைந்துள்ளது என்று கிருஷ்ண சீனிவாசன் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும் பணவீக்கம் நிரந்தரமாகக் குறைய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டு;ள்ளார்.
இலங்கையின் வளர்ச்சிப் பாதை குறித்து கருத்து தெரிவித்த சீனிவாசன், 2022ல் 8.7 சதவீத சுருங்கிய பின்னர், 2023ல் 3 சதவீதச் சுருக்கத்துக்குப் பின்னர் நாடு சிறியயை மீட்சி அடைந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.